தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்டர்நெட் டவர் விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு - chennai arumbakkam

சென்னையில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான இண்டர்நெட் டவர் விழுந்ததில் இரண்டு ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்டர்நெட் டவர் விழுந்ததில் இருவர் உயிரிழப்பு!
இன்டர்நெட் டவர் விழுந்ததில் இருவர் உயிரிழப்பு!

By

Published : Dec 20, 2022, 12:15 PM IST

சென்னை: அயப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் இண்டர்நெட் சேவை நிறுவனத்தில், சோழாவரத்தைச் சேர்ந்த மஞ்சுநாதன் (38) மற்றும் செம்மஞ்சேரியைச் சேர்ந்த தனசேகர் (39) ஆகியோர் பணியாற்றி வந்தனர். கடந்த சனிக்கிழமை (டிச.17) அரும்பாக்கம் வெங்கடேச பெருமாள் நகரில் தனியாருக்குச் சொந்தமான நிறுவனத்தில் பழுதடைந்த நிலையில் இருந்த கேபிள் டிவி மற்றும் இன்டர்நெட் டவரை அகற்றும் பணியில் இருவரும் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது 70 அடி நீளமுள்ள டவர் திடீரென விழுந்துள்ளது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ஊழியர்களும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அரும்பாக்கம் காவல் துறையினர், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு கேஎம்சி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு ஊழியர்களும், இன்று (டிச.20) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அரும்பாக்கம் காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 கல்லூரி மாணவர்கள் பலி!

ABOUT THE AUTHOR

...view details