சென்னை: சென்னை அடையார் பகுதியில் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி எதிரே உள்ள பேருந்து நிலையத்தில் நின்று போக்குவரத்து காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சாலையில் வந்து கொண்டிருந்த மூன்று பெண்கள் ஒரே வாகனத்தில் பயணித்துள்ளனர். இவர்களை மடக்கிப் பிடித்த போக்குவரத்து காவலர் ராஜேஷ் இது குறித்து விளக்கம் கேட்டபோது உடல்நிலை சரியில்லை எனக் கூறி, அங்கிருந்து வேகமாக தனது ஆண் நண்பர்களுடன் வாகனத்தை எடுத்து புறப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைக் கண்டு அருகில் டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்த சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த அருண்குமார் விக்ரம் என்பவர் இந்த மூன்று பெண்களையும், அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தையும் புகைப்படம் எடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பெருநகர சென்னை மாநகர காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையினை டேக் செய்து புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க:பொது சிவில் சட்டம் என்பது தேன் கூட்டில் கையை வைப்பது போன்றது - ஜவாஹிருல்லா எம்எல்ஏ
மூன்று பேர் பயணித்த வாகனத்தில் புகைப்படம் எடுத்ததை அறிந்த ஒரு பெண், அங்கு டீ குடித்திருந்த அருண் குமார் விக்ரமை நோக்கி வந்து, எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் அவரை தாக்கி, ஆபாசமாகப் பேசி நடு ரோட்டில் பொதுமக்கள் இருக்கும்பொழுது செருப்பைக் கழற்றி அடித்ததாக கூறப்படுகிறது.