தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி நகையை கொடுத்து நகை வாங்கிய இரு பெண்கள் கைது - பெண்கள் போலி நகை மோசடி

சென்னை: ஆவடி நகைக்கடை ஒன்றில் போலி நகையை கொடுத்து கம்மல் வாங்கி மோசடி செய்த இரு பெண்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

போலி நகையை கொடுத்து கம்மல் வாங்கி மோசடி செய்த இரு பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்
போலி நகையை கொடுத்து கம்மல் வாங்கி மோசடி செய்த இரு பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்

By

Published : Sep 7, 2020, 12:01 PM IST

ஆவடி, நேரு பஜாரில் நகைக்கடை நடத்திவரும் மோகன் (61) நேற்று கடையில் ஊழியர்களுடன் வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது, அங்கு இரு பெண்கள் கம்மல் வாங்க வந்துள்ளனர்.

பின்னர், அவர்கள் பழைய மோதிரம், கம்மல் ஆகியவற்றை மோகனிடம் கொடுத்துவிட்டு புதிய அரை கிராம் எடையுள்ள கம்மல் கேட்டுள்ளனர். இதனையடுத்து, மோகனும் பழைய நகைகளை வாங்கிவிட்டு, புதிதாக அரை கிராம் அளவிற்கு கம்மல் கொடுத்துள்ளார்.

பின்னர், இரு பெண்களும் சென்ற பிறகு, பழைய நகைகளைச் சோதித்துப் பார்த்துள்ளார். அப்போது, அவைகள் தங்கமுலாம் பூசிய போலி நகை எனத் தெரியவந்தது.

இது குறித்து மோகன் ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் இரு பெண்களையும் தேடியுள்ளனர்.

விசாரணையில் நகைக்கடை உரிமையாளரிடம் மோசடி செய்தது திருவள்ளூர், ஈக்காடு, சக்தி நகரைச் சார்ந்த தவுலத் பேகம் (44), பாத்திமா (38) ஆகியோர் எனத் தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் தலைமறைவான இருவரையும் கைதுசெய்து பின்னர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி இன்று புழல் சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details