தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு - இருசக்கர வாகனங்கள்

சென்னை: பெரும்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர்.

இருசக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு
Two wheelers fire

By

Published : Jul 28, 2020, 6:51 PM IST

சென்னை பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களுக்கு நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் குடியிருப்பிற்கு வெளியில் நிறுத்தியிருந்த ஏழு இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின. தகவலறிந்து வந்த துரைப்பாக்கம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்து சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து பள்ளிக்கரணை காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details