சென்னையில் உள்ள அயனாவரம் தந்தை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் நேற்று காலையில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றார். அப்போது, இவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி சென்றனர்.
இருசக்கர வாகனம் திருட்டு: வெளியான சிசிடிவி காட்சி - two wheeler theft
சென்னை: அயனாவரத்தில் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இருசக்கர வாகனம் திருட்டு
இந்த சம்பவம் மோகன் வசிக்கும் எதிர்வீட்டில் உள்ள சிசிடிவி கேமாரவில் பதிவாகியுள்ளது. இருசக்கர வாகனம் திருடுபோனது குறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் மோகன் புகார் அளித்தார். இதனால் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து இருசக்கர வாகனத்தை திருடி சென்றவர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.