சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது தடுப்பு சுவரில் இருசக்கர வாகனம் மோதி எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிந்தது. கீழே விழுந்த இளைஞர், வாகனம் தீப்பிடித்து எரிவதை கண்டு கண்ணீர் விட்டார்.
கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்
சென்னை: கோடம்பாக்கம் மேம்பாலம் தடுப்பு சுவரில் இருசக்கர வாகனம் மோதியதால் தீப்பிடித்து எரிந்தது.
இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். விசாரணையில் இருசக்கர வாகனத்தை ஓட்டியவர் ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த ஜசக் என்பதும் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் அதிகமாக இருந்ததால், தடுப்பு சுவரில் வாகனம் மோதியவுடன் பெட்ரோல் கசிந்து தீப்பிடித்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக வடபழனி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: விருதுநகர் பட்டாசு வெடி விபத்தில் 17 பேர் உயிரிழப்பு!