தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விக்ரம் பட நடிகரிடம் செல்போன் பறிப்பு.! - பொன்னியின் செல்வன்

அபியும் நானும், விக்ரம் போன்ற படங்களில் நடித்த இளங்கோ குமரவேலிடம் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் செல்போனை பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

Ilango Kumaravel  actor Ilango Kumaravel  stole cell phone from actor Ilango Kumaravel  cell phone  chennai  chennai news  செல்போன்  செல்போன் பறிப்பு  விக்ரம் பட நடிகரிடம் செல்போன் பறிப்பு  அபியும் நானும்  விக்ரம்  இளங்கோ குமரவேல்  ஜெய்பீம்  பொன்னியின் செல்வன்  மொழி
இளங்கோ குமரவேல்

By

Published : Nov 18, 2022, 12:13 PM IST

சென்னை:அபியும் நானும், விக்ரம், ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராகவும், பொன்னியின் செல்வன், மொழி போன்ற படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இளங்கோ குமரவேல் (57). இவர் அசோக் நகர் 12வது தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

நேற்று குமரவேல் திரைப்பட பணிகள் தொடர்பாக எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதிக்கு சென்றுவிட்டு, நள்ளிரவு 12.30 மணியளவில் வீட்டிற்கு செல்வதற்காக நடந்து வந்துள்ளார். அம்பேத்கர் மணிமண்டபம் அருகே குமரவேல் நடந்து வந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் குமரவேலிடம் இருந்து செல்போனை பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

செல்போன் பறிப்பு தொடர்பாக நடிகர் குமரவேல் அளித்த புகாரின் பேரில் பட்டினம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நியூசிலாந்தில் வேலை... லட்சக்கணக்கில் மோசடி...ஒருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details