சென்னை, எம்ஜிஆர் நகர், அம்மன் கோயில் குறுக்குத் தெருவில் வசித்துவரும் தேன்மொழி என்பவர் கடந்த 9ஆம் தேதி அன்று மதியம் கே.கே.சாலை, எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் பூ வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த திருநங்கைகள் இருவர் தேன்மொழியிடம் பணம் கேட்டுள்ளனர்.
தேன்மொழி தனது பணப்பையில் இருந்து பணத்தை எடுத்தபோது திருநங்கைகள் இருவரும் தேன்மொழியின் கையில் வைத்திருந்த பணப்பையை பறித்து இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர். இதுகுறித்து தேன்மொழி எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.