தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தகராறில் ஆட்டோவை பெட்ரோல் ஊற்றி எரித்த 2 இளைஞர்கள் கைது! - Two teenagers burn auto using petrol

சென்னை: தன்னுடன் தகராறு செய்த சக ஆட்டோ ஓட்டுநரின் ஆட்டோவை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞருடன் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Two teenagers burn auto using petrol
ஆட்டோவை பெட்ரோல் ஊற்றி எரித்த இரண்டு இளைஞர்கள்

By

Published : Dec 8, 2019, 11:11 PM IST

Updated : Dec 8, 2019, 11:52 PM IST

சென்னை ஆவடியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் தமிம் அன்சாரி (25). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், சக ஆட்டோ ஓட்டுநர் இம்ரான்கான் (22) என்பவருக்கும் நேற்றிரவு மது அருந்தும்போது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வீட்டுக்குக் கிளம்பிய தமிம், ஆட்டோவை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார். அதன்பின், அவரது ஆட்டோ நள்ளிரவில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தமிம் அப்பகுதி மக்களின் உதவியோடு தீயை விரைந்து அணைத்தார்.

ஆட்டோவை பெட்ரோல் ஊற்றி எரித்த இரண்டு இளைஞர்கள்

இது குறித்து காவல் நிலையத்தில் தமிம் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், இம்ரான்கான், அவரது நண்பர் ராஜேஷ் ஆகியோர் நள்ளிரவில் வந்து ஆட்டோவில் பெட்ரோல் ஊற்றி எரித்த காட்சி பதிவாகியதை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து காவல் துறையினர் இருவரையும் கைதுசெய்து பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: உசாரய்யா... உசாரு... ஏடிஎம் கார்டை திருடி 1.35 லட்சம் ரூபாய் அபேஸ் செய்த பெண்!

Last Updated : Dec 8, 2019, 11:52 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details