தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டவிரோதமாக செயல்பட்ட இரண்டு டாஸ்மாக் பார்களுக்கு சீல் - chennai crime news

பல்லாவரம் அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட இரண்டு டாஸ்மாக் பார்களுக்கு மாவட்ட மேலாளர் சீல் வைத்தார்.

இரண்டு டாஸ்மாக் பார்களுக்கு சீல்
இரண்டு டாஸ்மாக் பார்களுக்கு சீல்

By

Published : Oct 28, 2021, 10:38 PM IST

சென்னை புறநகர்ப் பகுதிகளிலுள்ள டாஸ்மாக் கடையில் சட்ட விரோதமாக 24 நான்கு மணி நேரமும், கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மகேஸ்வரிக்குப் புகார் வந்துள்ளது.

அப்புகாரின் பேரில் பல்லாவரம் அடுத்த பம்மல், நாகல்கேணி பிரதான சாலையில் உள்ள கடை எண் 4123, 4334 ஆகிய இரு டாஸ்மாக் கடைகளையும் மாவட்ட மேலாளர் மகேஸ்வரி தலைமையிலான அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சட்ட விரோதமாகக் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு மது விற்பனையில் ஈடுபட்டிருந்த வினோத் (33) என்பவரை கைது செய்தனர். மேலும் விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த 80 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.

இதையும் படிங்க:டாஸ்மாக் கடை தொடர்பான வழக்கு - நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details