சென்னை தாம்பரம் அடுத்த ஆதிநகரைச் சேர்ந்த பிரசாந்த்(20), தினேஷ் (17), ஜனா(17) ஆகிய மூன்று பேரும் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் அகரம் தென்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
சென்னையில் பேருந்து மோதிய விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு! - Two students dies in Chennai accident
சென்னை: தாம்பரம் அருகே இரு சக்கர வாகனம் மீது பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர்.

Two students killed in bus collision in Chennai, சென்னையில் பேருந்து மோதிய விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு
அப்போது அவர்கள் மீது தனியார் பள்ளிப் பேருந்து மோதியதில் பிரசாந்த், தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஜனாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Two students killed in bus collision in Chennai, சென்னையில் பேருந்து மோதிய விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரூரில் லாரி மீது பேருந்து மோதி 10 பேர் படுகாயம்