தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் அரங்கேறும் 'ரூட்டு தல' விவகாரம் - இரு மாணவர்கள் கைது!

சென்னை: அரசுப் பேருந்தின் கூரை மீது ஏறி பயணம் செய்து அட்டகாசம் செய்த இரண்டு கல்லூரி மாணவர்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

Climbing on the roof of the bus
Climbing on the roof of the bus

By

Published : Jan 7, 2020, 12:00 AM IST

சென்னையில் சில தினங்களுக்கு முன்பு 'ரூட்டு தல' என்ற பெயரில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்றுவந்தன. பின்னர் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து அட்டகாசம் செய்யும் கல்லூரி மாணவர்களைக் கவனித்து அவர்களை கைதுசெய்தனர். மேலும் பல மாணவர்களைப் பிடித்து அறிவுரை வழங்கியும் தனிப்படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இன்று மாலை 5 மணியளவில் அரசுப் பேருந்து ஒன்று மந்தவெளியிலிருந்து ராயப்பேட்டை வழியாக வந்துகொண்டிருந்தது. அப்பொழுது அந்தப் பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவர்கள் சிலர் அரசுப் பேருந்தின் மேற்கூரைகளில் பயணம் செய்து பயணிகளுக்கு இடையூறாக கூச்சலிட்டுக் கொண்டும் பாடல்களை பாடிக்கொண்டும் இருந்தனர்.

மீண்டும் அரங்கேறும் ’ரூட்டு தல’ விவகாரம்

அரசுப் பேருந்தானது சென்னை பல்லவன் சாலை அருகே வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மாணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதைக் கண்ட காவல் துறையினர் இரண்டு மாணவர்களை திருவல்லிக்கேணி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்கள் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவிக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

இதையும் படிங்க:செய்த ஊழல்களை மறைக்க ஆவணங்களை எரித்த ஊராட்சி செயலாளர்!

ABOUT THE AUTHOR

...view details