தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி - இரண்டு ஆசிரியைகள் கைது - சென்னை செய்திகள்

தமிழ் வளர்ச்சி தொல்லியல் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 5 லட்சம் மோசடி செய்த, இரண்டு அரசுப்பள்ளி ஆசிரியைகளை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

2 அரசு பள்ளி ஆசிரியைகள் கைது
2 அரசு பள்ளி ஆசிரியைகள் கைது

By

Published : Oct 9, 2021, 2:38 PM IST

சென்னை:புழல் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா கார்மல் (43). இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ரயிலில் செல்லும்போது, பெரம்பூர் செம்பியம் பகுதியை சேர்ந்த மேகலா(59) அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பாடி புதுநகரை சேர்ந்த சத்திய பிரியா(35)அரசுப்பள்ளி ஆசிரியர் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது.

ரயில் பயண நட்பால் நடந்த விபரீதம்

இதனைத் தொடர்ந்து, அனிதா கார்மல் தான் பட்டப்படிப்பு முடித்து இருப்பதாக கூறியதையடுத்து, ஆசிரியர்கள் இருவரும் தனக்கு தமிழ் வளர்ச்சி தொல்லியல் துறையில் ஆள்கள் தெரியும். ஆகையால் உங்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி உள்ளனர்.

இதனை நம்பிய, அனிதா கார்மல் அவர்களிடம் ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். பணம் கொடுத்து வெகு நாட்கள் ஆகியும் வேலை வாங்கித் தராததால், அனிதா பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் பணம் பெற்ற 2 ஆசிரியைகளும் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்ததால், அவர் இருவர் மீதும் கடந்த 2017 ஆம் ஆண்டு தனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்ச பணத்தை ஏமாற்றியதாக புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

புகாரின் பேரில் காவல்துறையினர், விசாரணை செய்தபோது 2 ஆசிரியைகளும் பணத்தை திருப்பி தருவதாக கூறிவிட்டு சென்றுள்ளனர். ஆனால் தொடர்ந்து பணத்தை தர காலம் கடத்தி வந்ததால் அனிதா சம்பவம் தொடர்பாக சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் உயர் அதிகாரிகளின் உத்தரவை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர்கள் இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை - பொறியியல் மாணவர் சேர்க்கையில் அதிர்ச்சித் தகவல்

ABOUT THE AUTHOR

...view details