சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் திருட்டுத்தனமாகக் கஞ்சா போதைப் பாக்கு விற்கப்படுவதாக தண்டையார்பேட்டை உதவி ஆணையருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் பேரில் ஆர்கே நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது கொருக்குப்பேட்டை, சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் சந்தேகத்தின் பேரில் ஒரு இளைஞரும், பெண்ணும் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, கையில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தன. உடனே காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது, பிகாரைச் சேர்ந்த அவர் கொருக்குப்பேட்டையில் தங்கி லோடு வேலை செய்துவரும், உதயகுமார் (30) என்பது தெரியவந்தது.