சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம், பன்னாட்டு முனையத்திற்கு இடையே விமான நிலைய விரிவாக்கப் பணி நடைபெற்றுவருகிறது.
இதற்காக அந்தப் பகுதியில் இரும்புக் கம்பிகள், செம்பு வயர்கள் ஆகியவை குவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்றிரவு அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்த இரும்பு, செம்பு வயர்களைத் திருட முயற்சித்துள்ளனர்.
இதனைக் கண்ட அங்கு பணியிலிருந்த தொழிலாளர்கள் இருவரையும் பிடித்து விமான நிலைய காவல் துறையினரிடம் பிடித்துக் கொடுத்தனர். பின்னர், அவர்களை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் திரிசூலம் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (43), தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் (32) எனத் தெரியவந்தது. மேலும், இருவரும் சேர்ந்து இரும்பு கம்பிகளைத் திருட முயற்சித்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, விமான நிலைய காவல் துறையினர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.30 லட்சம் மதிப்பிலான 600 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்!