சென்னை:மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர், கண்ணன். இவர் வீடுகளில் தண்ணீர் கேன் போடும் தொழில் செய்துவருகிறார்.
இவர் நேற்றிரவு (அக்டோபர். 20) தனது வீட்டிலிருந்தபோது அடையாளம் தெரியாத 4 நபர்கள் உள்ளே நுழைந்து, கத்தியால் அவரை தாக்க முயன்றனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளறையில் சென்று கதவை மூடிக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் வீட்டின் வெளியே இருந்த தண்ணீர் கேன்களை கத்தியால் வெட்டிவிட்டு, அங்கிருந்த கார், ஆட்டோவின் கண்ணாடிகளை அடித்து உடைத்துவிட்டுச் சென்றனர்.
பிறகு இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் கண்ணன் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், மதுரவாயலைச் சேர்ந்த அபுபக்கர், மோகன் ஆகியோரைக் கைது செய்து விசாரணை செய்தனர்.