சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டு செல்வதுபோல இந்த ஊரடங்கினால் பட்டம் விடுவோர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இதனால், மாஞ்சா நூல் சிக்கி பாதிக்கபடுவோரின் எண்ணிக்கையும் அதிகமானது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக காவல் துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக உயரமான கோபுரங்களில் இருந்து பைனாகுலர் கருவி, டிரோன் கருவி மூலம் பொதுமக்களை காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும், தெருக்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைத்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த உத்தரவை மீறி பட்டம் விற்றதாக பல்வேறு நபர்களையும் காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், புளியந்தோப்பு திருவிக நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல், பட்டம் ஆகியவை விற்பதாக புளியந்தோப்பு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் துறை இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், தடை செய்யப்பட்ட மாஞ்சா நூலை விற்பனை செய்த லிவீன்(34), அல்மாஸ்(30) ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து மாஞ்சா நூல், இரண்டு மாஞ்சா தயாரிக்கும் இயந்திரம், மாஞ்சா செய்யும் பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: சென்னை மக்களை மரண பீதிக்குள்ளாக்கும் மாஞ்சா