தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விலை உயர்ந்த செல்போன்களை திருடிய இருவர் கைது - செல்போன் திருட்டு

சென்னை: அம்பத்தூரில் கடையின் இரும்பு ஷட்டர் பூட்டை உடைத்து விலை உயர்ந்த செல்போன்களை திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செல்போன் திருடியவர்கள்
செல்போன் திருடியவர்கள்

By

Published : Jul 31, 2020, 7:13 PM IST

சென்னை அம்பத்தூர், கிருஷ்ணாபுரம் சிடி.எச் சாலையில் சங்கீதா செல்போன் விற்பனை கடை உள்ளது. இங்கு சுரேஷ் (28) என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஜூலை 18ஆம் தேதி மாலை சுரேஷ் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர், மறுநாள் காலை அவர் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் இரும்பு ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும், அங்கு உள்ள ஷோகேசில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 21 செல்போன்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

உடனே இதுகுறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். காவலர்கள் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் கொள்ளையர்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

இதில், கொள்ளை செயலில் ஈடுப்பட்டது சென்னை, டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த ரவுடி ரூபன் (30), அவரது கூட்டாளி கார்த்திக் (24) ஆகியோர் என தெரியவந்தது. இதனையடுத்து, தனிப்படை காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின்படி காவல்துறையினர் 12 செல்போன்களை மட்டும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரையும் காவல்துறையினர் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details