தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகனம் மீது மினி பேருந்து மோதியதில் இருவர் உயிரிழப்பு - சென்னை

சென்னையில் இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த மினி பேருந்து மோதி இருவர் பலியாகிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த மினி பேருந்து மோதி இருவர் பலி
இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த மினி பேருந்து மோதி இருவர் பலி

By

Published : Jul 5, 2022, 3:38 PM IST

சென்னை: சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் இருவர் சோழிங்கநல்லூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த மினி பேருந்து மோதியதில் தலை நசுங்கி ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த இளைஞரை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது அவரும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இருவரும் நாவலூரில் இருந்து துரைப்பாக்கம் செல்வதற்காக வந்த போது விபத்தில் சிக்கியதாகவும், அவர்களது பெயர் அபிஷேக் சிங்(30), ரூபேஷ்(27), என்பதும் தெரியவந்தது.

இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த மினி பேருந்து மோதி இருவர் பலி

இதையடுத்து மினி பேருந்தை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:இரண்டாவது மனைவியை கொலை செய்த கணவர் கைது

ABOUT THE AUTHOR

...view details