சென்னை:சேலையூர், சிட்லப்பாக்கம், குரோம்பேட்டை பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்திருப்பதாக புகார்கள் வந்ததையடுத்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், கூடுவாஞ்சேரி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் அந்தோணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க உத்தரவிடப்பட்டது.
அதன் பேரில் மதுவிலக்கு போலீசார் சிட்லப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர்களை கண்டறிந்தனர். அவர்கள் ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வருவதையறிந்த போலீசார் எழும்பூர் ரயில் நிலையத்தில் வைத்து இருவரையும் கைது செய்து 2 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன் பறிமுதல் செய்தனர்.