சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயல் காரணமாக அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை கானத்தூர் இந்திரா தெருவில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மூன்று பேர் கடந்த 5 வருடங்களாக கட்டட தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (டிச.04) காலை கட்டிட தொழிலாளர்கள் தனது வாடகை வீட்டில் உறங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது அருகில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் மதில்சுவர் இடிந்து விழுந்தது. அதில் உறங்கி கொண்டிருந்த ஷேக் அப்ரோச், முஹம்மது டோபிக் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.