சென்னை: காசிமேட்டில் வசித்து வந்த கணவன், மனைவி ஆகியோருக்கிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறின் காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இத்தம்பத்திக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி காசிமேட்டில் உள்ள மனைவியின் வீட்டில், சிறுமியை அவரது தந்தை விட்டுச் சென்றுள்ளார்.
ஒரு வாரம் கழித்து சென்றபோது, மகளைக் காணாததை கண்டு சிறுமியின் தந்தை அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக ராயபுரம் காவல் நிலையத்தில் மகளைக் காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் புகாரின் அடிப்படையில் ராயபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புழல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று திருமணம் செய்ததும், பின்னர் பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்தது.
இதற்கு கார்த்தியின் நண்பரான, சோழவரம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் உடந்தையாக இருந்துள்ளார். இதனையடுத்து இருவர் மீதும் போக்சோ, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட சிறுமி குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இதையும் படிங்க:'ஆபாச காணொலிகள் அனுப்பியோர் மீது நடவடிக்கை எடுங்க' - பெண் அரசியல் பிரமுகர்