தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெருங்குடியில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு! - Two people died

பெருங்குடியில் கழிவுநீர் உறை கிணற்றை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்தனர்

பெருங்குடியில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு
பெருங்குடியில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

By

Published : Jul 30, 2022, 8:57 AM IST

சென்னை:பெருங்குடி 13ஆவது ஒளவையார் தெருவில் வசித்து வருபவர் சரவணன், இவர் அச்சகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் 7 அடி ஆழ உறை கிணற்றில் உள்ள கழிவுநீரை சுத்தம் செய்ய நீலாங்கரையை சேர்ந்த காளிதாஸ் என்பவரை அழைத்து வந்துள்ளார்.

உறை கிணற்றில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்த போது காளிதாஸ் விஷவாயு தாக்கி மயங்கினார். அவர் மயங்கியதை கண்டு சரவணன் அவரை காப்பாற்ற முயன்று கால் இடறி விழுந்ததில் தலையில் அடிப்பட்டு மயங்கினார்.

தகவலறிந்து வந்த துரைப்பாக்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்டு , மருத்துவர்களை அழைத்து சோதித்து பார்த்த போது இருவரும் உயிரிழந்தது தெரிய வந்தது.

இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மின் கட்டண உயர்வு - ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து நூதன போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details