தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கத்தியால் கழுத்தை வெட்டி செல்போன் பறிப்பு; இருவருக்கு போலீசார் வலைவீச்சு - chennai

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கத்தியால் கழுத்தை வெட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பட்டன் கத்தியால் கழுத்தை வெட்டி செல்போன் பறிப்பு
பட்டன் கத்தியால் கழுத்தை வெட்டி செல்போன் பறிப்பு

By

Published : Sep 15, 2022, 8:11 AM IST

Updated : Sep 15, 2022, 8:24 AM IST

சென்னை திருவல்லிக்கேணி முத்துசா தெருவை சேர்ந்தவர் சையத் யாசர் (31) திருவல்லிக்கேணி ஆதாம் மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். சயத் யாசர் சென்ட்ரல் ரயில் நிலையம் வால் டாக்ஸ் ரோடு சுரங்கப்பாதை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை வழிமறித்து மிரட்டி பணம் மட்டும் செல்போனை கேட்டுள்ளனர்.

ஆனால் சையத் யாசர் கொடுக்க மறுத்ததால் இரண்டு பேரும் பட்டன் கத்தியை வைத்து சையத் யாசரின் கழுத்தில் வெட்டிவிட்டு செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் காயம் அடைந்த சையத் யாசரை அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மருத்துமனையில் சுய நினைவின்றி சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து பூக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: CCTV:கோயம்பேடு மார்க்கெட்டில் பழப்பெட்டிகள் திருடிய நபர்கள்!

Last Updated : Sep 15, 2022, 8:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details