தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. அப்போது பேசும் பெரும்பாலான திமுக உறுப்பினர்கள் திமுகவின் இளைஞரணிச் செயலாளராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு பேசத் தொடங்குகின்றனர்.
‘இனமான பேராசிரியரை ஞாபகம் வச்சிக்கோங்க’ - ஜெயக்குமார் கிண்டல்! - ஸ்டாலின்
சென்னை: பேராசிரியர் அன்பழகனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.
jayakumar
அந்த வகையில் இன்று செய்தித் துறை மானியக் கோரிக்கையில் பேசிய திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவி, தன் பேச்சைத் தொடங்கும் முன்னர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதனை கவனித்த மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘எல்லாரையும் வாழ்த்துறீங்க, உங்க இனமான பேராசிரியர் அன்பழகனையும் கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கோங்கப்பா’ என கிண்டல் செய்தார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.