சென்னை, தாம்பரத்தை அடுத்த சோமமங்கலம் காட்டாரபாக்கத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுமோ (35) என்பவர் தங்கி வேலை பார்த்துவருகிறார். இவர் கடந்த 4ஆம் தேதி இரவு செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரின் கையில் இருந்த செல்போனைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து சோமமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(19), கார்த்தி(17) என்பது தெரியவந்தது.