சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் குடிசைப் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (35), சைன் ஷா(32) ஆகியோர் பல பகுதிகளுக்குச் சென்று கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியைச் செய்துவந்துள்ளனர்.
இந்நிலையில், இன்றும் (ஜூலை 15) அவர்கள் குபேந்திரன்(53) என்பவர் தனது வீட்டிலுள்ள கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யச் சென்றுள்ளனர். இதையடுத்து நாகராஜூம், சைன் ஷாவும் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். அப்போது திடீரென்று சைன் ஷாவி விஷவாயுவால் தாக்கப்பட்டு, மயக்கமடைந்துள்ளார். பின்னர் அவரைக் காப்பாற்ற நாகராஜ் முயன்றுபோது அவரும் விஷவாயுவால் தாக்கப்பட்டுள்ளார். இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.