சென்னை இரும்புலியூர் அருகேயுள்ள சத்தியசாய் நகரில் வீட்டில் வைத்து புகையிலைப் பொருட்கள், மதுபாட்டில்கள் விற்பனை நடப்பதாக தாம்பரம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தாம்பரம் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் ஆல்பின் ராஜ் தலைமையிலான காவல் துறையினர் அப்பகுதி முழுவதும் சோதனை செய்தனர். அப்பொழுது அங்குள்ள ஒரு வீட்டில் வைத்து புகையிலை பொருட்கள், மது பாட்டில்கள் விற்பனை நடப்பது காவல் துறையினருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அதனை விற்பனை செய்த சென்ராய பெருமாள்(37) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 85 கிலோ குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகள், 56 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.