சென்னைஉயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட இரண்டு நீதிபதிகள் நாளை (நவ. 23) மாலை பதவியேற்கின்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
அலஹாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த விவேக் குமார் சிங், தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த எம்.சுதீர் குமார் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்ய கொலிஜியம் (collegium) பரிந்துரைத்து இருந்தது.
இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் இருவரையும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி அண்மையில் உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் நாளை (நவ. 23) மாலை 4.45 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.