கரோனா வைரஸ் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்நிலையில், பொது சேவையில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், பத்திரிகையாளர்கள் போன்றவர்கள் கரோனா தொற்றுக்கு பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களுக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஒருவர் திருவல்லிக்கேணி மேன்சன் ஒன்றில் தங்கியிருந்தார். அந்தப் பகுதிக்குள் பொதுமக்கள் நுழையத் தடை விதித்துள்ள மாநகராட்சி நிர்வாகம், தற்போது, அந்தப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.