சென்னை: பெரியமேடு காட்டூர் சடையப்பன் தெருவில் ரிஸ்வான் என்பவர், பார்சல் சர்வீஸ் நடத்தி வருகிறார். பல்வேறு பகுதியில் இருந்து பார்சல்களை ரயில் மூலமாக அனுப்பும் பணியை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றிரவு (அக்.02) லாரி ஒன்றில் வந்த பார்சல்களை ஊழியர்கள் இறக்கி கொண்டிருந்தனர். அப்போது, போதையில் வந்த இருவர், மாமூல் கேட்டதாகவும், இல்லை என்றதும் அங்கிருந்த பார்சலை எடுக்கமுயன்றதாகவும் கூறப்படுகிறது.