தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொளத்தூரில் சிலிண்டர் வெடித்து விபத்து - இருவர் படுகாயம் - A water shop named Aqua Tech

கொளத்தூரில் சிலிண்டர் அருகே அமர்ந்து செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது சிலிண்டர் வெடித்த விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கொளத்தூரில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து- இருவர் படுகாயம்
கொளத்தூரில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து- இருவர் படுகாயம்

By

Published : Sep 4, 2022, 10:23 PM IST

சென்னை:ஸ்ரீலங்காவைச் சேர்ந்த குகந்ததாஸ் என்பவர் ‘அக்வா டெக்’ என்ற பெயரில் தண்ணீர் விநியோக கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு எதிரே மரத்தின் கீழ் வெல்டிங் மெஷின்களை வைத்து வெல்டிங் வேலையையும் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று (செப். 04) குகதாஸின் கடையில் பணியாற்றும் சதீஷின் நண்பர் வைணவ பெருமாள் கேஸ் சிலிண்டர் அருகே அமர்ந்து செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் சதீஷ் மற்றும் வைனவ பெருமாள் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை கொடுத்த தகவலின் அடிப்படையில் கொளத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்திம் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:ஈரோடு அருகே டெம்போ கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details