கோவிட்-19 வைரஸ் தொற்று கடந்தாண்டு இறுதியில் சீனாவில் பரவத்தொடங்கியது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இந்த வைரஸ் தொற்று குறைகின்றபோதும், மற்ற நாடுகளில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், கரோனா அச்சம் காரணமாக, போதிய பயணிகள் இல்லாமல் சென்னை விமான நிலையம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. உதாரணமாக, 178 போ் பயணம் செய்யும் வசதியுடைய ஏா்பஸ் விமானம் 20-க்கும் குறைவான பயணிகளுடன் இயக்கப்படுகிறது. இதனால், இன்று மட்டும் 224 விமானங்களின் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, கொச்சி ஆகிய பெருநகரங்களுக்குச் செல்லும் விமானங்களும் இதைப்போல் இயக்கப்படுகின்றன.
இதனிடையே, வரும் நள்ளிரவு 12 மணியிலிருந்து, மார்ச் 29ஆம் தேதி வரை சா்வதேச விமானங்கள் இந்தியாவிற்கு வந்து செல்ல மத்திய அரசு இடைக்காலத் தடைவிதித்துள்ளது.