தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தவறான சிகிச்சையால் வீராங்கனை பிரியா மரணம்: 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட்! - player priya

சென்னையில் அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அறிவித்துள்ளது.

தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை மரணம்
தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை மரணம்

By

Published : Nov 15, 2022, 1:00 PM IST

Updated : Nov 15, 2022, 3:02 PM IST

சென்னை:கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மாணவி பிரியாவுக்கு இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்த நாளங்கள் சேதமடைந்ததால் உயர் சிகிச்சைக்காக கடந்த 10 ஆம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாணவி சேர்க்கப்பட்டார்.

அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மாணவி பிரியாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் காயம் எவ்வாறு உள்ளது என்பதை பரிசோதனை செய்த பொழுது, காயம் மேலும் அதிகரித்திருப்பதும், தசை வளர்ந்திருப்பதும் கண்டறியப்பட்டது. அதனால் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதனால், ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு உறுப்புகளும் பாதிக்கப்பட்டது. கல்லீரல் செயலிழந்தது. இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ரத்த அழுத்தம் குறைந்து, டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு சென்றார்.

அதனால் இரவு முழுவதும் டயாலிசிஸ் செய்யப்பட்டது. தசை கிழிந்ததால் தசையிலிருந்து வெளிவரக்கூடிய திரவ வடிவிலான மையோகுளோனஸ் என்ற திரவம் வெளியேற துவங்கியது. அந்த திரவம் பொதுவாக சிறுநீர் வழியாக தான் வெளியேறும். ஆனால் திரவம் வெளியேற முடியாமல் ரத்தத்தில் கலந்ததால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, சிறுநீரக பாதிப்பு முதலில் ஏற்பட்டு, சிறுநீரகம் செயலிழந்தது.

இதனைத் தொடர்ந்து ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் ஒரு ஒரு உறுப்புகளாக செயல் இழந்த நிலையில் மாணவி பிரியா இன்று காலை 7.15 மணியளவில் உயிரிழந்தார். அதன் பின்னர் பிரியாவின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் போராட்டம் செய்த நிலையில், தற்போது உடலை பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம்

Last Updated : Nov 15, 2022, 3:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details