சென்னை:மீனம்பாக்கத்தில் உள்ளசென்னை விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமான சேவைகள் இலங்கைப் பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
வழக்கமாக அதிகாலை 1 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து விமானம் புறப்பட்டு அதிகாலை 2 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடையும். அதே விமானம், மீண்டும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு இலங்கை சென்றடையும். இந்த இரு விமான சேவைகளும் வானிலை காரணமாக இன்று அதிகாலை திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.