சென்னை:ஆந்திரமாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த கன்சர்லையா பிரசாத் (30) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாபிலோனா (25) இருவரும், சென்னை கிண்டி ஈக்காட்டுதாங்கலில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று (டிசம்பர் 8) இரவு பைக்கில் வெளியே சென்று வீட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இவர்கள், அரும்பாக்கம் 100 அடி சாலை மெட்ரோ ரயில் சந்திப்பில் திரும்பும்போது, அவ்வழியாக வந்த சரக்கு லாரி ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது, இவர்கள் மீது லாரி ஏறி இறங்கியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.