சென்னை: தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது முதல் பல்வேறு திட்டங்களை போலீசார் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தாம்பரம் மாநகர காவல் போக்குவரத்து விதிமுறைகளுக்கான நேரடி அபராதம் செலுத்தும் இ சலான் திட்டம் எனப்படும் பணமில்லாமல் அபராதம் செலுத்தும் முறையை தாம்பரம் காவல் ஆணையர் கடந்த டிசம்பர் மாதம் துவக்கி வைத்தார்.
இந்தநிலையில் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் போக்குவரத்து காவல்துறையினர் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய மாதங்களில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு நேரடி பணமில்லா அபராதம் செலுத்தும் முறையில் 53,872 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 2,11,04,370 அபராதம் வசூலித்துள்ளனர்.