தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் இருவர் கைது - சென்னை அண்மைச் செய்திகள்

பிரபல கட்டுமான நிறுவனத்திடம், மோசடியில் ஈடுபட்ட கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

கைது
கைது

By

Published : Jun 21, 2021, 10:44 AM IST

பிரபலமான அன்னை பில்டர்ஸ் கட்டுமான நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஸ்ரீதர் நாராயணன். இவர் கால் எக்ஸ்பிரஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்கள் ரமேஷ் (61), அவரது மனைவி மரியா ரமேஷ் (55) ஆகிய இருவரும், தன்னிடம் மோசடியில் ஈடுபட்டதாகக் காவல் துறையில் புகாரளித்தார்.

அதில் பெரும்பாக்கத்தில் உள்ள அரசு அங்கீகாரம் இல்லாத ஆறு ஏக்கர் நிலத்தை வைத்து, ரூ.18.5 கோடி கட்டுமான ஒப்பந்தத்தில் ஈடுபட்டு மோசடி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

மோசடியில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டோர்

விசாரணையில் போலி ஆவணங்கள் மூலம் மோசடியில் ஈடுபட்டு பெறப்பட்ட பணத்தை, ஆஸ்திரேலியாவில் உள்ள தனது மகன் பிரவீன் நிறுவனத்திற்குச் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்தது தெரியவந்தது.

ஏற்கனவே 2019ஆம் ஆண்டு இதே நிலத்தை வைத்து, ரூ.25 கோடி மோசடியில் ஈடுபட்டதாக மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது இதனைத் தொடர்ந்து ரமேஷ், மரியா ஆகியோர் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய இளைஞர்: மூவருக்கு சிறை!

ABOUT THE AUTHOR

...view details