சீன நாட்டைச் சேர்ந்த சாங் ஷின் (26) மற்றும் குவோ வெய்(35). இவர்கள் இரண்டு பேரும் சுற்றுலா பயணிகளாக ஜனவரி மாதம் 27ஆம் தேதி சென்னைக்கு வந்துள்ளனர். சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்துள்ளது. தொடர் காய்ச்சல், இருமல் காரணமாக ஹோட்டல் நிர்வாகம் அளித்த அறிவுரையின் அடிப்படையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சீன இளைஞர்கள் இருவரையும், கரோனா வைரஸ் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட தனி அறையில் வைத்து மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர்.
சென்னையில் இரண்டு சீன இளைஞர்களுக்கு கரோனா?
சென்னை: கரோனா வைரஸ் நோய் தொற்று அறிகுறி காரணமாக இரண்டு சீன இளைஞர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதி.
Corona Virus
Last Updated : Mar 17, 2020, 5:53 PM IST