இருசக்கர வாகனத்தில் வந்து செல்ஃபோன் வழிப்பறி செய்த செல்ஃபோன் கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளுவர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த கிஷோர்குமார். இவர் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், கிஷோர்குமார் வைத்திருந்த செல்ஃபோனை பறித்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
கொள்ளையர்கள் இருவர் கைது - 9 செல்ஃபோன்கள் பறிமுதல் - cellphone snatching arrested at chennai
சென்னை: இருசக்கர வாகனத்தில் வந்து செல்ஃபோன் வழிப்பறி செய்த பலே திருடர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
cellphone robbers arrest
இந்நிலையில் நேற்று அந்த பகுதியில் சுற்றி திரிந்த இருவரை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அயனாவரத்தைச் சேர்ந்த கரண்குமார் மற்றும் அமைந்தகரையைச் சேர்ந்த நித்தேஷ் என்பதும், இருவரும் கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செல்ஃபோன் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து விலை உயர்ந்த 9 செல்ஃபோன்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Last Updated : Oct 12, 2019, 4:11 PM IST