சென்னை: ஆலந்தூர் அடுத்த பழவந்தாங்கல் குமரன் தெரு சக்தி விநாயகர் கோயில் எதிரில் ராஜேஷ் மற்றும் காந்திமதி ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு கார்கள் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று அதிகாலை இரண்டு கார்களும் தீப்பிடித்து எரிவதாக அப்பகுதி மக்கள் கிண்டி தீயணைப்பு துறையினக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு துறையினர் காரில் பற்றிய தீயை அரை மணிநேரம் போராடி அனைத்தனர். ஆனால், அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.