சென்னை:கோயம்பேட்டில்நேற்றிரவு (நவ.11) சுமார் 11 மணியளவில் கோயம்பேடு 100 அடிச்சாலையில் அவ்வழியாக வந்த புறநகர் மற்றும் மாநகரப்பேருந்துகள் மற்றும் வாகனங்களை வழிமறித்து செல்லவிடாமல் சாலையின் குறுக்கே சென்று இரண்டு சிறுவர்கள், மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து அங்கு வந்த சிஎம்பிடி காவல் துறையினர் அங்கிருந்த பொதுமக்கள் அச்சிறுவர்களை தடுக்க முயன்றபோது அச்சிறுவர்கள் பிடிக்க வந்த பொதுமக்களை தாக்கியும், காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்து மேலும் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு வந்த உதவி ஆய்வாளர் ஒருவரும் சாலையை வழிமறித்து ரகளை செய்த சிறுவர்களில் ஒருவனிடம் சமாதானமாக பேச முயன்றார். அப்போது அச்சிறுவன் தனது ஆடைகளை கழற்றிவிட்டு தலைக்கேறிய போதையில் நிர்வாணமாக நின்று தன்னை தடுக்க முடியாது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சாலையின் குறுக்கே நிற்காமல் விலகி வருமாறு எவ்வளவோ எடுத்துக்கூறியும் சிறுவர்கள் இருவரும் சாலையை மறித்து நின்றதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் பொறுமை இழந்த பொதுமக்களே சிறுவர்கள் இருவரையும் விடாபிடியாக பிடித்து தர்ம அடிகொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பிடிபட்ட இருவரும் மெரினா பகுதியைச் சேர்ந்த 13 மற்றும் 17 வயது சிறுவர்கள் என்பதும், கோயம்பேடு பகுதிக்கு வந்தபோது ஒரு கடையில் செல்போன் சார்ஜ் செய்ய கொடுத்து பின் தனது செல்போன் காணவில்லை எனக்கூறி ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
Video: கோயம்பேடு அருகில் உச்சபோதையில் ரகளை செய்த சிறுவர்கள் நிதானமில்லாத போதையில் சிறுவர்கள் இருவரும் அவர்களுக்குளாகவே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகவும், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:லோன் பெற்று தருவதாக கூறி பெண்ணிடம் மோசடி செய்தவர்கள் கைது...!