சென்னைவேளச்சேரி ராம்நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன்(62). இவர் சேலத்தில் உள்ள 20 ஏக்கர் நிலத்தை தன் வசம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், இந்த இடம் மலேசியாவைச் சேர்ந்த செல்லப்பா என்பவருக்கு சொந்தமானது எனவும் கூறப்படுகிறது. இவ்வாறு இருவரும் தங்களது இடம் எனக் கூறிக் கொள்ளும் நிலையில், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மலேசியாவைச் சேர்ந்த செல்லப்பா, பிரபல ரவுடி சீசிங் ராஜாவை அணுகி தியாகராஜனை இடத்தை விட்டு விரட்ட வேண்டும் என கூறியுள்ளார். இதன்படி சீசிங் ராஜாவும் தனது கூட்டாளிகள் மூவரை தியாகராஜன் வீட்டிற்கே அனுப்பி வைத்துள்ளார். எனவே கூட்டாளிகள் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
ஆனால், அங்கு தியாகராஜன் இல்லை. அவரது மகள் மட்டுமே இருந்துள்ளார். இந்நிலையில் அங்கு சென்ற மூவர், செல்போனை அவரது மகளிடம் கொடுக்க அதில் சீசிங் ராஜா பேசியுள்ளார். அப்போது, “நான் பெரிய ரவுடி. சேலத்தில் உள்ள இடத்தில் இருந்து உங்க அப்பாவை ஒதுங்கிவிட சொல்லு. இல்லையென்றால், குடும்பத்தோடு கொலை செய்து புதைத்து விடுவேன்” என சீசிங் ராஜா மிரட்டல் விடுத்துள்ளார்.