சென்னை:மிக்ஜாம் புயல் காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த அதிக கனமழையால், சாலைகள், குடியிருப்புகள் என அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனை அகற்றும் முயற்சியில் அந்தந்த மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ள போதிலும், சென்னையில் இதன் பாதிப்புகள் இன்னும் குறைந்த பாடில்லை.
இதனிடையே, வேளச்சேரி 5 பர்லாங் சாலையில் தனியாருக்கு சொந்தமான கேஸ் பங்க் இயங்கி வருகிறது. அதன் அருகில் தனியார் நிறுவனம் ஒன்று ஏழு அடி அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்காக, 50 அடியில் பள்ளம் தோண்டப்பட்டு பேஸ்மெண்ட் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கனமழை காரணமாக அந்த பள்ளத்தில் மண் சரிவு ஏற்பட்டு கேஸ் நிலை அலுவலக கட்டடம் உள்ளே விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த பள்ளதில் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த ஜெயசீலன் மற்றும் கேஸ் பங்க் நிலையத்தில் பணிபுரிந்து வந்த நரேஷ் ஆகிய இருவரும் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
இந்நிலையில், அப்பகுதி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு தீயணைப்புத் துறையினர் L&T உள்ளிட்ட வீரர்கள் சுமார் ஐந்து நாட்களாக அந்த பள்ளத்தில் தேங்கிய நீரை வெளியேற்றி சேரை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ச்சியாக, பல்வேறு கட்டப் போராட்டத்திற்கு பின்பு ஐந்தாவது நாளாக இன்று (டிச.8) நரேஷ் என்பவரது உடலும் ஜெயசீலன் என்பது உடலும் மீட்கப்பட்டு ராயப்படை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அந்த தனியார் கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் இருவரை கிண்டி போலீசார் கைது செய்துள்ளனர். தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளர்கள் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக எழில் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:வேளச்சேரி கட்டட விபத்து; 50 அடி பள்ளத்தில் சிக்கிய இருவரில் ஒருவரின் உடல் இறந்த நிலையில் மீட்பு!