சென்னை:போர்ச்சுகல் நாட்டை தலைமையிடமாக கொண்ட பெட்டிக்கோ கமர்ஷியோ என்ற நிறுவனத்தின் கிளை ராமாபுரம் டிஎல்எப் பகுதியில் செயல்பட்டு வருகிறது. கனிமவளம் வர்த்தக தொழில் தொடர்பாக சுமார் ரூ.114 கோடி முதலீட்டை பெற்ற கலால் குழும நிறுவனம் மோசடி செய்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு இயக்குனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சரவணன் பழனியப்பன் மற்றும் விஜய் ஆனந்த் என்ற இரண்டு இயக்குனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கனிமவள வர்த்தகம் தொடர்பாக கனரக வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கியதாக போலி ஆவணம் தயாரித்தும், மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தில் தனியார் நிறுவனத்திடம் தொழில் ஒப்பந்தங்கள் பெற்றதாக போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததாக வெளிநாட்டு நிறுவனமான பெட்டிக்கோ கமர்ஷியோ நிறுவனம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தது.