குரோம்பேட்டை மேம்பாலம் கீழே அமைந்துள்ள இரு மதுக்கடைகளிலும் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அப்பகுதியில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (26), சங்கர் (36) இருவரும் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை உறுதி செய்து, இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.