சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி அரசு மதுபானங்களை சென்னைக்கு கடத்தி செல்வதாக காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் ஸ்ரீபெரும்புதூர் அருகேவுள்ள வல்லக்கோட்டை கூட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
சட்டவிரோதமாக மதுபானங்களை கடத்திய இருவர் கைது; 1,344 மதுபாட்டில்கள் பறிமுதல்! - காவல்துறை விசாரணை
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி மதுபானங்கள் கடத்த முயன்ற இருவரை மதுவிலக்கு அமல் பிரிவு கவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், காஞ்சிபுரம் அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையிலிருந்து சென்னைக்கு மதுபானங்கள் கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அரசு மதுபானங்களை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த வேலாயுதம், ராஜா ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், கடத்தி வரப்பட்ட 1,344 அரசு மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். பின் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.