சென்னை, செங்குன்றம் பகுதி வழியாக கஞ்சா கடத்திவருவதாக மயிலாப்பூர் துணை ஆணையரின் தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், தனிப்படை காவல் துறையினர் செங்குன்றம் பேருந்து நிலையத்திற்கு அருகே சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமாக கையில் பையுடன் வந்த இருவரைக் காவலர்கள் பிடித்து சோதனை செய்துள்ளனர். அந்தப் பையில், சுமார் 22 கிலோ கஞ்சா இருப்பதைக் கண்ட காவல் துறையினர் இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.
அதில், ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தைச் சேர்ந்த ரவிகுமார் (46), நாகேஷ்வர ராவ் (35) என்பது தெரியவந்தது. இவர்கள் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை, பேருந்து மூலம் கொண்டுவந்து சென்னையில் உள்ள பிரபல கஞ்சா வியாபாரியான கஞ்சா சுப்பிரமணி என்பவரிடம் விற்க வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதேபோல், தொடர்ந்து சப்ளை செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கஞ்சா சுப்பிரமணியை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:பத்து கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது!