தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பகுதி நேர பெயிண்டர்.. முழு நேர கஞ்சா சப்ளையர்..

மாங்காடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ஏழு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பகுதி நேர பெயிண்டர்.., முழு நேர கஞ்சா சப்ளையர்...!
பகுதி நேர பெயிண்டர்.., முழு நேர கஞ்சா சப்ளையர்...!

By

Published : Aug 14, 2022, 9:58 PM IST

சென்னை:மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து மாங்காடு காவல் ஆய்வாளர் ராஜி, சப் இன்ஸ்பெக்டர் பொற்பாதம் ஆகியோர் தலைமையில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், மாங்காடு அடுத்த கோவூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வந்து கொண்டிருந்த இரண்டு பேரை மடக்கி சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது குன்றத்தூர் அடுத்த நந்தம்பாகத்தைச் சேர்ந்த ஜனார்த்தனம்(36), கோவூரைச் சேர்ந்த விஜயகுமார்(42), என்பதும் இருவரும் பகல் நேரங்களில் பெயிண்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து இங்கு தேவைப்படுவோருக்கு சில்லறையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க தங்களை பெயிண்டர்கள் என்று கூறி வந்துள்ளனர்.

பகுதி நேரமாக பெயிண்டர் வேலை செய்து கொண்டு முழு நேரமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க: அரும்பாக்கத்தில் வங்கி மேலாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு

ABOUT THE AUTHOR

...view details