தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா ஆயில் விற்ற இளைஞர்கள் கைது - கள்ளதனமாக கஞ்சா ஆயில் விற்பனை

பல்லாவரத்தில் கஞ்சா ஆயில் விற்பனை செய்த இளைஞர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து 350 மில்லி லிட்டர் கஞ்சா ஆயில் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா ஆயில் விற்ற இளைஞர்கள் கைது
கஞ்சா ஆயில் விற்ற இளைஞர்கள் கைது

By

Published : Dec 16, 2022, 8:54 PM IST

சென்னை:பல்லாவரம் சந்தையில் கள்ளத்தனமாக கஞ்சா ஆயில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, தாம்பரம் மதுவிலக்கு ஆய்வாளருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பல்லாவரம் சந்தையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களை நிருத்தி காவல் துறையினர் விசாரித்துள்ளனர். அப்போது, அந்த இளைஞர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர்கள், இளைஞர்களை சோதனை செய்தனர். சோதனையில், இளைஞர்களின் வாகனத்தில் இருந்து 35 பாட்டில்களில் 350 எம்எல் கஞ்சா ஆயில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரித்திக் (22), சிஐடி நகரைச் சேர்ந்த ராகவன் (22) என்பது தெரியவந்துள்ளது. இதில், ரித்திக் கடந்த ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

கஞ்சா ஆயில்

இதையடுத்து, அவர்கள் இருவரிடம் இருந்தும் வாகனம் மற்றும் கஞ்சா ஆயிலை மது விலக்கு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இளைஞர்கள் இருவரையும் பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சாலையோர வியாபாரிக்கு கொலை மிரட்டல் - வைரலாகும் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details